கோவை மாநகராட்சி பகுதிகளில் 54-ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி

தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 54-ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் மூலமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களில் 29 ஆயிரத்து 425 மாணவர்கள், 34 ஆயிரத்து 748 மாணவியர் என 64 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளிகளிலேயே ‘கோ–வின்’ இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்குப் பதிவு செய்யத் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு ஒரு மருத்துவர், ஒரு சுகாதாரப் பணியாளர் என தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் மூலமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...