கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்க கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது

கோவை உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். மாணவர்கள் பலர் தனியாக அறை எடுத்தும் தங்கி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு கஞ்சா விற்பனை செய்ய, தேனி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்கிறார்கள்.

இந்தநிலையில், கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு, திருச்சி சுங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து, ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது, வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது, ஒரு இரு சக்கர வாகனத்தில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து எடுத்துவரப்பட்டது.

இதுதொடர்பாக, கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த அப்துல் சமது (வயது 29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (32), தேனி மாவட்டம், கம்பம், பகுதியை சேர்ந்த அருண்குமார்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், அவர்கள் கம்பத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வந்து மாணவர்கள் உள்பட பலருக்கு விற்க திட்டமிட்டதாக தெரிவித்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர், இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...