அரியலூர் மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறப்போராட்டம் நடத்தப்படும் - இந்து முன்னணி அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் மக்களை ஒன்றுதிரட்டி இந்து முன்னணி சார்பில் வரும் 24-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: அரியலூர் மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்ற தொல்லைக்கு ஆளாகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்த மு.லாவண்யா என்ற மாணவியின் இழப்பு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல தமிழக இந்துக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மரணத்திற்கு முன்பான மாணவியின் வாக்குமூலம் வெளியான நிலையில் லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்களும், பொதுமக்களும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காவல்துறை அந்த பள்ளியின் வார்டன் சகாயமேரியை மட்டும் கைது செய்ததுடன் மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்று அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் இருவரையும், பள்ளியின் பாதிரியாரையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கைதுசெய்து அதிகபட்ச தண்டனையை வழங்கக்கோரி நீதிகேட்டு தமிழகம் முழுவதும் மக்களை ஒன்றுதிரட்டி இந்து முன்னணி சார்பில் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்து அன்னையர் முன்னணி சார்பில் நீதிகேட்டு விளக்கேந்தி போராட்டமும், 27-ந்தேதி (வியாழக்கிழமை) இந்து இளைஞர் முன்னணி சார்பில் உயிர்குடிக்கும் கட்டாய மதமாற்றம் செய்யும் கல்வி நிலையங்கள் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...