கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை பல மடங்கு உயர்வு..!

முதல்தர மல்லிகைப்பூ ஒரு கிலோ 2,600 முதல் 3000 ரூபாய்க்கும், முல்லை ஒரு கிலோ 1600 முதல் 2000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு வரும். இதனை கோவையைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

முதல்தர மல்லிகைப்பூ ஒரு கிலோ 2,600 முதல் 3000 ரூபாய்க்கும், முல்லை ஒரு கிலோ 1600 முதல் 2000 ரூபாய்க்கும், காக்கடா பூ ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதுதவிர செவ்வந்தி கிலோ 120க்கும், சம்மங்கி கிலோ 80 ரூபாய்க்கும், அரளி 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து கோவை பூ கடை விற்பனையாளர் சுனில் கூறியதாவது:-

தற்போது பெய்து வரும் கடும் பனி காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால் வரத்து மிகக் குறைவாக உள்ளது.

தற்போது பனிக்காலம் நிறைவு பெறவுள்ள தருணத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பூக்கள் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மல்லிகை பூ மட்டும் சத்தியமங்கலத்தில் இருந்து குறைவான அளவிலேயே வருகிறது. இதனால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு இப்போது 3 டன் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு டன் அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. பனிக்காலம் நிறைவடைய உள்ளதால் பூ விலை குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...