கோவை உக்கடம் பெரியகுளம், வாலங்குளத்தில் படகு சவாரி துவங்க திட்டம்..?

கோவையில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது, உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி அடுத்த கட்டமாக துவங்கப்படும் என்று தகவல்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் படகு சவாரி துவங்கப்படும் என்று மாநகராட்சி உயர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட உக்கடம், பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகிய குளங்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக, மாநகராட்சி திறந்து வைத்தது.

இதில், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல், செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் படகு சவாரி துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ள 6 குளங்களில் பொதுமக்களுக்கு எந்த வகையான கட்டணமும் விதிக்கப்படவில்லை. சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது கோவை மாவட்டம் தான். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது இக்குளங்களுக்கு மக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் படகு சவாரி துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல, வாலாங்குளத்திலும் படகு சவாரி அடுத்த கட்டமாக துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...