திருப்பூரில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்..! முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்..!

1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு 99.24 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யும் வகையிலும் தேவை அதிகரித்தால் 25.42 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் செய்யும் வகையிலும் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இத்திட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திட்ட விளக்கம் குறித்த கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...