பொள்ளாச்சியில் லாரியில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீரை பிடிக்கும் பொதுமக்கள் - கொரோனா பரவும் அபாயம்..!

தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்வதால் இது போன்ற இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் தண்ணீர் டேங்க் பழுதான நிலையில், லாரியில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடிநீர் இணைப்பு இல்லாத பெரும்பாலான வார்டுகளுக்கு நகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

அந்தந்த வார்டுகளில் தண்ணீர் நிரப்ப 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நிரப்பப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு அமைதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் சேமிப்பு பிளாஸ்டிக் டேங்குகள் உள்ளது.



ஆனால், இரண்டு டேங்குகளும் ஓட்டை விழுந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக லாரிகளில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து வருகின்றன. வீடுகள் தூரமாக இருப்பதால் பொதுமக்கள் நீண்ட தூரம் குடங்களில் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.



ஆனால், தண்ணீரைப் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்வதால் இது போன்ற இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டை விழுந்த தண்ணீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடியாக புதிய தண்ணீர் டேங்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...