கோவையில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

மேலும், 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி பூங்கா அமைக்க அந்தந்த மாவட்டங்களில் இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



பொள்ளாச்சி அருகே உள்ள கப்லாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை இன்று முதலமை‌ச்ச‌ர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.



இன்று கப்லாங்கரை கிராமத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,



தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் முதலமை‌ச்ச‌ர் அறிவுறுத்தலின்படி, மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

73 துணை மின்நிலையங்களுக்கு மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும்.

மேலும், அடுத்த ஆண்டு 95 துணை மின் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு முதலமை‌ச்ச‌ர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் பேருக்கு வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மார்ச் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி பூங்கா அமைக்க அந்தந்த மாவட்டங்களில் இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனைத்து மாவட்டங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...