கோவையைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்கு, 'கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்' விருது..!

தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்த நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் குடியரசு தின விழாவில், கோவையைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்கு 'கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்' வழங்கப்பட உள்ளது.

மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கோட்டை அமீர் பெயரில், 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' அரசால் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் நபருக்கு, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், மத நல்லிணக்கத்துக்காக பணியாற்றிய, கோவையைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்கு, 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் வெளியிட்டுள்ளார்.

முகமது ரபிக்கு வழங்கப்படும் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இது தவிர, 25 ஆயிரம் ரூபாய்க்கான வரைவு கேட்புக் காசோலை, சான்றிதழ் போன்றவை முதல்வரால் வழங்கப்பட உள்ளன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...