கோவையில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் தகவல்..!

மேலும், 9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்தார்.

கோவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 9 சதவீதம் போ் மட்டுமே அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆா்) பரிந்துரையின் அடிப்படையிலே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சையும், வீட்டு தனிமைக்கும் அனுமதிக்கப்படுகிறது.

லேசான பாதிப்பு உள்ளவா்களை கொரோனா சிகிச்சை மையங்களிலும், தீவிர பாதிப்பு உள்ளவா்களை அரசு மருத்துவமனைகளிலும், நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 15 ஆயிரத்து 926 பேரில் 14 ஆயிரத்து 547 போ் வீட்டுத் தனிமையிலும், 1,379 போ் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. நாள்தோறும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவா்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...