திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட தென்னம்பாளையம் தினசரி சந்தையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை..!

தினசரி சந்தையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட தென்னம்பாளையம் தினசரி சந்தையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-



திருப்பூர் தென்னம் பாளையம் தினசரி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தினமும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.

அதேபோல, சில்லறை வியாபாரத்திற்கான கடைகளும் ஏராளமாக உள்ளதால் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் பகுதியாக உள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடங்களை பார்வையிட்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து சந்தையில் நீர் தேங்கும் வகையில் சாலை உள்ளதாகவும், அதனை சரி செய்து காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும், அதிக பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் கழிவறை வசதி செய்து தர வேண்டும் மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்து காலதாமதம் செய்யாமல் உடனடியாக கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...