கோவையில் ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை புதுப்பித்தல்‌ பணிகளுக்கு பூமிபூஜை துவக்கம்..!

6.06 கிலோ மீட்டர் தொலைவில் புதுப்பித்தல்‌ பணிகளுக்கு பூமிபூஜை செய்து மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலங்களில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌கீழ்‌ ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ 6.06 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை புதுப்பித்தல்‌ பணிகளுக்கும்‌, கிழக்கு மண்டலத்தில்‌ விளாங்குறிச்சியிலுள்ள கோனார்‌ குட்டையை ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைத்தல்‌ பணியினை பூமிபூஜை செய்து, பணியினை மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள்‌ இன்று துவக்கி வைத்தார்.



இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தலைமை வகித்தார்‌. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ (TNSUDP) கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌

37க்குட்பட்ட தண்ணீர் பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.6 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட விநாயகபுரம்‌ பிரதான சாலையில்‌ ரூ.116 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.37 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, வார்டு எண்‌.28க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பிரதான சாலையில்‌ ரூ.174 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.73 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, ஆகமொத்தம்‌ ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ 6.06 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலைகள்‌ புதுப்பித்தல்‌ பணிக்கு பூமிபூஜை செய்து, பணியினை மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்கள்‌ துவக்கி வைத்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32ல்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளாங்குறிச்சி கிராமத்திலுள்ள கோனார்‌ குட்டையை புனரமைத்தல்‌ பணிக்கு பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகரப்பொறியாளர்‌ இராமசாமி, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்‌, முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையாகிருஷ்ணன்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஏ.பி.நாகராஜன்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ திருமதி.மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, செந்தில்பாஸ்கர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...