திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக பெண் பிரமுகர் உட்பட 8 பேர் கைது..!

இவ்வழக்கில் ஈடுபட்ட சந்திரபோஸ், ரவிக்குமார், கோபிநாத் ஆகிய மூன்று பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக பெண் பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் வேலன் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் சீட் கவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அதிமுக மகளிர் அணி மாவட்ட துணை செயலாளரான திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

செல்வியின் தூண்டுதலின் பெயரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19ம் தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரவே கடத்தலில் ஈடுபட முயன்ற ஏழு பேரும் காரில் தப்பிச் சென்றனர்.



இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பாபு உத்தரவின் பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் பிரமுகர் மற்றும் சந்திரபோஸ், கோபிநாத், அஜய், விக்னேஷ், அருண்குமார், தினேஷ்குமார், ரவிக்குமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் ஈடுபட்ட சந்திரபோஸ், ரவிக்குமார், கோபிநாத் ஆகிய மூன்று பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...