பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.

இரவு நேரங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலை விபத்துகளிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கப் பக்தர்களின் கைகளில் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்களை அணிவித்து சாலை விபத்துகளிலிருந்து பக்தர்கள் பாதுகாக்கப்பட்டது.

அத்துடன் அவர்களுக்குத் தேவையான குடிநீர் உணவு வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நோய் தொற்று பரவ வேகமெடுத்து உள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தைப்பூச திருவிழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் பழனி சென்றன. அரசின் அனுமதி இல்லாததால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டது. தகுந்த பாதுகாப்பு தற்போது ஆலயங்களில் சாமி தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பழனியில் பெருமளவில் கூடியுள்ளனர். அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் விபத்து ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...