ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் என தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் அஞ்சலி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக அணி சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து குறிச்சி வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து குறிச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், கட்சி தலைமைக்கு ஆதரவு தெரிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக தற்போது சட்டமன்றத்தில் தனிப்பெருன்பான்மையுடன் உள்ளதாகவும், இதனால் மத்திய அரசு தமிழக அரசை அச்சுறுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுவாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த நிர்வாகிகளை கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சசிகலா முடிவு செய்வார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...