கோவை திரையரங்கங்களில் இரவு நேர காட்சிகள் ரத்து

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.


கோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகக் கோவையில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.கோவை மாநகரில் 1,150 போலீசார் இரவு ஊரடங்கையொட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் வியாபாரம் செய்வோர் அனைவரும் இரவு 10 மணிக்கு முன்பாக கடையை மூடிவிட்டு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், அவினாசி சாலை, திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து சோதனை செய்தனர். பின்னர் அவர்களை மீண்டும் இதுபோல் தேவையின்றி வெளியில் வரக் கூடாது என கூறி எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இரவு ஊரடங்கு அறிவித்ததை அடுத்து நேற்று முதலே கோவையில் உள்ள சினிமா திரையரங்கங்களில் காலை, பகல் மற்றும் மாலை நேர காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இரவு நேரங்களில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திரையரங்கங்கள் நேற்று இரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இரவு நேர காட்சிகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கினால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் திரையரங்கங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...