பொள்ளாச்சி அருகே அடிதடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

புகாரின் பேரில் வீரா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே அடிதடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்து உள்ள சோமந்துரைசித்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், திமுக பிரமுகர். இவருக்கும் சோமந்துரை சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் அதிமுகவை சேர்ந்த கோபால் என்பவருக்கும், முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி கோபால் மற்றும் செல்வராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் கோபால் அவரது நண்பர்கள் சக்திவேல், வீரா, சுரேஷ் ஆகிய மூன்று பேரை அழைத்து வந்து செல்வராஜை தாக்கியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, செல்வராஜ் கடந்த 4ம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று வீரா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...