பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சி அருகே பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி - அகில பாரத அனுமன் சேனா சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 30.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்று 31.12.2021 அன்று பொள்ளாச்சி தனியார் பத்திரிகை செய்தியாளர் மகேஷ் குமார் மற்றும் ஊடக செய்தியாளர்களை தொலைபேசியில் அழைத்து செய்தி வெளியிட வற்புறுத்தியும், செய்தி வெளியிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில் அனுராக் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான அனுராக்கை போலீசார் தேடி வருகின்றனர்

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...