திருப்பூர் அருகே வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரில் பதுங்கிய விஷ பாம்பைத் தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்தனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு வந்ததால் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டிலிருந்த சிலிண்டரில் பதுங்கிய விஷ பாம்பைத் தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஆர்.வி.இ நகர் பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக அப்பாஸ் என்பவர் தனது மனைவி பெனசீர் மற்றும் குழந்தைகள் அப்சான நிஷா, அப்சர் உடன் வசித்து வருகிறார். அப்பாஸ் மனைவி பெனசீர் இரவு உணவு தயார் செய்வதற்காகச் சமையலறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென சமையல் அறையிலிருந்து சுமார் 3-அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதைக்கண்ட பெனசீர் உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்களை அழைக்கச் சென்றுள்ளார்.
அந்த இடைவெளியில் பாம்பு சமையலறை உள்ளே மறைந்து கொண்டது. பின்னர் பயத்தில் உறைந்த பெனசீர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியில் எடுத்து சோதனை செய்த போது சிலிண்டருக்கு அடியில் பாம்பு சுற்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி சீலிண்டர் அடிப்பாகத்தில் சுற்றி இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.
குடியிருப்பு பகுதியில் பாம்பு வந்ததால் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.