கோவையில் கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரம்- மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: பொதுமக்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌, அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்‌, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்து கண்காணித்திடச் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து வணிகர்கள்‌, மருத்துவர்கள்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று 03.01.2022 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கோவை மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ இரண்டு டோஸ்‌ தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திட வேண்டும்‌. வணிகர்கள்‌ தங்கள்‌ கடைகளுக்கு வரும்‌ வாடிக்கையாளர்களை கொரோனா பாதிக்காமல்‌ இருக்க அரசின்‌ பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளி மற்றும்‌ கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்‌ கொள்ள அறிவுறுத்திட வேண்டும்‌. அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்‌. தொடர்ந்து, அனைத்து வணிகாகளும்‌ கடைகளுக்கு முன்‌ கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளாரகள்‌ பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்‌.



அரசின்‌ வழிகாட்டுதலின்படி கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்குக் கட்டாயம்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்கப்படும்‌. அதேபோல்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, கிருமிநாசினி பயன்படுத்துதல்‌ மற்றும்‌ சமூக இடைவெளியைப் பின்பற்றாத தனிநபர்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்திட வேண்டும்‌. மேலும்‌, பொதுமக்கள்‌ அதிகம் கூடும்‌ இடங்களான வணிகவளாகங்கள்‌, திரையரங்குகள்‌, மார்க்கெட்‌ போன்ற பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்படும்‌.

அரசு மேற்கொள்ளும்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா ‌, BST நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, மருத்துவர்கள்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌, உணவகங்கள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ உரிமையாளர்கள்‌, காய்கறி மார்க்கெட்‌ சங்கத்தினர்‌, துணிக்கடைகள்‌, நகைக்கடைகள்‌ மேலாளர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...