கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ மற்றும்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து ஆணையாளர்‌ ஆய்வு

பீளமேடு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ ரூ.99-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 03.01.2022 நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.38 க்குட்பட்ட பீளமேடு நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ காப்பிணி தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும்‌, புற நோயாளிகளின்‌ பதிவேடு மற்றும்‌ டாக்டர்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்துக் கேட்டறிந்த பின்னர்‌ அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகள்‌ மற்றும்‌ கணினி பதிவேற்றம்‌ (Scanning Centre)செய்யும்‌ மையத்தில்‌ அதன்‌ செயல்பாடுகளைக்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டு, அம்மையத்தில்‌ ரூ.99 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ கூடுதல்‌ கட்டிடத்தின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ குறித்துப் பார்வையிட்ட பின்னர்‌, கட்டுமானப்‌ பணிகளைத் தரமானதாகவும்‌, விரைவாகவும்‌ முடித்து மருத்துவமனையைப் பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, பாப்பநாயக்கன்பாளையம்‌ இலட்சுமனபுரம்‌ பகுதியில்‌ மியாவாக்கி மரக்கன்றுகள்‌ நடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆணையாளர்‌‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



மேலும்‌, பாப்பநாயக்கன்பாளையம்‌ பகுதியில்‌ கழிவுநீர்க்‌ கால்வாய்களைச் சுத்தம்‌ செய்து குப்பைகளை உடனடியாக அகற்றியும்‌, கால்வாயிலுள்ள செடி, கொடிகள்‌, தேங்கியுள்ள குப்பைகளைத் தூர்வாரி கழிவுநீர்‌ தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.40க்குட்பட்ட காமதேனு நகர்‌ பகுதியிலுள்ள வார்டு அலுவலகம்‌ மற்றும்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்குச் சென்று பள்ளியின்‌ கழிவறைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்‌.

இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகன சுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...