கோவையில் 10.78-லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கோவையில் 10-லட்சத்து 78-ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10-லட்சத்து 78-ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் தமிழக அரசு பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது.

அதில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்தில் 10-லட்சத்து 78-ஆயிரத்து 484-குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 200-பேருக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ரேஷன் கடையில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க பரிசு தொகுப்பு வழங்கப்படும். நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்ட டோக்கன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அதில் அவரவர் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும். பொங்கல் பரிசை பெற்றுக்கொண்டதும், சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், கோவை மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...