திருப்பூரில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவங்கியது..!

திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.


திருப்பூர்: தமிழக அரசு அறிவித்திருந்த 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்று திருப்பூரிலும் துவங்கியது.

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரக்கூடிய சூழ்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

கொரோனா தொற்றின் வீரியத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன் அடிப்படையில் திருப்பூரிலும் இத்திட்டம் துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.



இந்த நிலையில், இன்று காலை ஜெய்வாய்பாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...