கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


கோவையின் பல்வேறு இடங்களிலுள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி படிப்பு வரையில் படிக்கின்றனர். 

இந்த மாணவ மாணவிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அவர் 'சிம்ப்ளி சிட்டி'க்கு அளித்த  பேட்டியில்  கூறியதாவது :- 

கோவையில் உள்ள ஆதரவற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து 5-வது ஆண்டாக வரும் 8-ம் தேதி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோவையிலுள்ள 17 காப்பகங்களில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் என 20 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகளும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. அன்று மாலை நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...