2022ம் ஆண்டை ‘விழிப்புணர்வான உலகம்’ உருவாக்க அர்ப்பணிப்போம் - சத்குரு புத்தாண்டு வாழ்த்து..!

மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது தான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அதன் மூலம் மட்டுமே விழிப்புணர்வான உலகை உருவாக்க முடியும் என்று சத்குரு கூறியுள்ளார்.


கோவை: "2022-ம் ஆண்டினை விழிப்புணர்வான உலகம் (கான்சியஸ் பிளானட்) உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிக்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆதியோகி முன்பு நேற்று நடந்த சிறப்பு சத்சங்கத்தில் அவர் பேசியதாவது:-

மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது தான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அதன் மூலம் மட்டுமே விழிப்புணர்வான உலகை உருவாக்க முடியும்.

நாம் உலகில் விழிப்புணர்வு அலையை உருவாக்கிவிட்டால், பூமியை பாதுகாப்பது என்பது இயற்கையான எதிர்வினையாக நிகழ்ந்துவிடும். உலகை தற்போது இருப்பதை விட சிறப்பானதாக ஆக்க நாம் உறுதி ஏற்போம்.

காலம் என்பது எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. அது ஓடி கொண்டே இருக்கும். காலத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கும். ஆகவே, அதன் மதிப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக மாற்ற முயற்சி எடுங்கள். ஒவ்வொரு தினத்தையும் புத்தாண்டின் முதல் தினமாக நீங்கள் பார்க்க வேண்டும்.

364 நாட்களை விழிப்புணர்வு இன்றி ஏனோ தானோ என்று கழித்துவிட்டு ஒரே ஒரு நாள் தீர்மானம் எடுத்துக் கொண்டாடுவதால் எந்த பயனும் விளையாது. வெறும் தீர்மானங்களை எடுப்பதை விட தினமும் நீங்கள் ஒரு உயிராக என்ன செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

எல்லா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் வகையில் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்கிறீர்கள் அல்லது மேலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி போகிறீர்களா என்பதை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் செயலை விழிப்புணர்வாக செய்யப் பழகுங்கள். இவ்வாறு சத்குரு பேசினார்.



‘கான்சியஸ் பிளானட்’ என்னும் உலகளவிலான இயக்கத்திற்காக சத்குரு அவர்கள் 2022ம் ஆண்டை அர்ப்பணித்துள்ளார். இவ்வியக்கம் மண் வள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக வலுவான கொள்கைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்காட்ட உள்ளது.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...