கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் தொடர்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் தொடர்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(33), இவரது மனைவி மைதிலி(29) இவர்களுக்குப் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை சதீஷ்குமாரின் மனைவி மைதிலி தனது இருசக்கர வாகனத்தில் தனது பாட்டி முத்தம்மாளை பின்னால் அமர வைத்து எஸ். மேட்டுப்பாளையம் அரண்மனைபுதூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனம் ஒன்று மைதிலி ஓட்டி வந்த வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் மைதிலி அவரது பாட்டி முத்தம்மாள் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து, இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மைதிலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த முத்தாம்மாளை மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி பெண் உயிரிழந்ததாகக் கூறி கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டாலின் செல்வின் ராஜா(21) என்பவரைக் கைது செய்த போலீசார் அவர் மீது கொலைக்குற்றம் மரணம் விளைவிக்கும் செயல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.