பொள்ளாச்சி அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 12,000 மதுபாட்டில்கள் அழிப்பு..!

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அழித்தனர்.



கோவை: பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை அழித்தனர்.



பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வாகன சோதனை மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த மதுபாட்டில்கள், கர்நாடகா, கேரளாவில் இருந்து பொள்ளாச்சியில் கள்ளச்சந்தையில் விற்க கொண்டுவந்த மதுபாட்டில்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் அமலாக்கத்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் போலீசார் அழித்தனர்.



இது குறித்து துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலால் துறை அதிகாரி விஜயகுமார், உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...