137வது ஆண்டு விழாவையொட்டி பாஜக ஆட்சியை அகற்றிவிட்டு ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியை அளிக்க வேண்டும் என்ற பிரகடனத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டியினர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள அவர்களது கட்சி அலுவலகமான காம்ராஜ் பவனில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி 137வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 137வது ஆண்டு பிரகடனமாக "இந்தியாவில் பாஜக ஆட்சியை அகற்றிவிட்டு ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியை அளிக்க வேண்டும்" என்ற பிரகடனத்தை எடுத்துள்ளதாக கூறினார்.