வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், வாலாங்குளம் பகுதியில் 35 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ளவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். வாலாங்குளம்  பகுதியில் இருந்து காலி செய்யுங்கள் என மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். பின்னர், 2015 மே 8ம் தேதியன்று எங்களை வாலாங்குளம் பகுதியை விட்டு அகற்றி எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனர்.

அக்கடிதம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...