நீலகிரி மாவட்டம் காவல்துறையினர் சாலை விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை விபத்து குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்களை சாலையில் வாகனத்தில் செல்லும் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் வழங்கினார். 



நீலகிரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும், மலை பாதையில் மேல் நோக்கி ஏறும் வாகனங்களுக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள் நிறுத்தி வழி விடவும், குறிப்பிட்ட வேகத்தில் செல்லவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்ட கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, திருப்பும் முன்பு சிக்னல் செய்யவும், இரவில் எதிராக வாகனங்கள் வரும் போது ஒளியை குறைக்கவும், முக்கியமாக சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்கவும், முந்தி செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும், வளைவில்  குறுகிய சாலையில் பாலங்களில் முந்த வேண்டாம், வாகனத்தை இடதுபுறமாக ஓட்டவும் எந்த நேரத்திலும் எதிரே வாகனங்கள் வரலாம், சிக்னல் விளக்குகளை மதித்து இயக்கவும் போக்குவரத்து காவல் துறை சைகைக்கு மதித்து வாகனத்தை இயங்கவும், வாகனத்தில் அனுமதித்த எடைக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம்.

நோயாளிகள் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கு உடனே வழி விடவும், மழைகாலங்களில் வேகத்தை குறைக்கவும், வாகனத்தை நிறுத்தும் முன்பு சிக்னல் செய்யவும்,  மலை பாதை வளைவில் திரும்பும்போது எதிரே ஒரு வாகனம் வருகிறது என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும், இவையெல்லாம் கடைப்பிடித்தால் எந்த ஒரு விபத்தும் இல்லாமல் அனைவரையும் பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...