ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், ஜல்லிகட்டு மாட்டுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மத்திய பா.ஜ.க அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...