வேளாண் சட்டங்கள் வாபஸ்; உயிரிழந்த விவசாயிகளுக்காக நினைவு தூண் அமைக்க தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோரிக்கை..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சு.பழனிசாமி மற்றும் உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதைக் கொண்டாடினர்.



இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

351வது நாட்கள் கழித்து பாரத பிரதமர் இன்று விவசாயிகள் போராட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது என்றும், மேலும் போராடும் விவசாயிகள் இடத்தில் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றியது குறித்து மனம் திறந்து மன்னிப்புக் கேட்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.

கடந்த போராட்ட காலத்தில் வேளாண் சட்டத்தைத் திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய நிலையில், இன்று தான் பிரதமருக்கு எட்டியுள்ளது. போராட்ட களத்தில் உயிர் நீத்தவர்களை எங்கள் தளபதிகளாக கருதுகிறோம். மேலும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். இந்த வீரவணக்கம் என்பதை விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.



விவசாயிகள், சட்ட வல்லுநர்கள், விஞ்ஞானிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் மூலம், விவசாய சட்டங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பும் விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...