ஊழல் தடுப்பில் புதிய தணிக்கை பிரிவை தொடங்க திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவைத் தமிழக அரசு தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் தென் மண்டல மாநாடு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலியில் கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவைத் தமிழக அரசு தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியப் பட்டய கணக்காளர்கள் மண்டல மாநாடு கோவை நீலம்பூர் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.



500-க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையம் வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.



இதில் தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

மாநாட்டைத் துவக்கி வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



53-வது மண்டல கருத்தரங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் மண்டல கவுன்சில் வரலாற்றில் முதல்முறையாக 5-ஆயிரம் பேர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளால் இந்த கருத்தரங்கில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளேன். நிதித்துறை, கணக்கு தணிக்கையோடு உங்கள் பணி நின்றுவிடாது. நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி வருகிறீர்கள். பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பட்டய கணக்காளர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள்.



பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவைத் தமிழக அரசு தொடங்க உள்ளது. இதில் முக்கிய ஆலோசனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக செயல்படுத்துவோம். பட்டய கணக்காளர்கள் வெறும் கண்காணிப்பாளராக அல்லாமல், பொருளாதார பாதுகாப்பாளராக உள்ளீர்கள். வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் ஜலபதி மற்றும் பட்டய கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.

சிக்கலான நிறுவனத்தை புரிந்து கொள்ள நிதிநிலை அறிக்கை அவசியம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "வங்கி இயக்குநராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் பட்டய கணக்காளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போது நிதி அமைச்சராக இதே மாநாட்டில் பேசுவது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. எந்த ஒரு சிக்கலான நிறுவனத்தைப் புரிந்து கொள்ள நிதி நிலை அறிக்கை என்பது மிகவும் அவசியமாக உள்ளது. இத்தகைய அறிக்கையை உருவாக்குவதில் பட்டய கணக்காளர்கள் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப் பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த குழுவில் பட்டய கணக்காளர்களும் இடம்பெறுவார்கள். இந்திய அரசியல் சாசனப்படி கணக்கு தொழில் முக்கியமானது. தமிழக அரசு பட்டய கணக்காளர்களுடனான தொடர்பை அதிகரித்து வருகிறது. எனவே இந்த தொழிலைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்." என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் நிஹார் எம்.ஜம்புசாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பட்டய கணக்காளர் படிப்பில் பாடத்திட்டத்தை மாற்றம் செய்து வருகிறோம். இறுதியாகப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தற்போதே பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் அமலாகும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தொழில்களை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்களுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்மண்டல தலைவர் ஜலபதி, பட்டய கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி கோவை கிளையின் தலைவர் பிரபு, செயலாளர் நாககுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...