நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆ.ராசா எம்.பி மற்றும் வனத்துறை அமைச்சர் K. ராமச்சந்திரன் நேரில் ஆய்வு..!

மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக ஆ.ராசா கூறினார்.



கோவை: நீலகிரியில் அண்மை மழையினால் காந்தல், விசி காலனி, படகு இல்லம், எல்லநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை நீலகிரி MP ஆ.ராசா மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் K. ராமச்சந்திரன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.



பின்னர், உதகை பிங்கர் போஸ்ட் பகுதியிலுள்ள விசி காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அவர்களுக்கு கம்பளி ஆடைகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கினர்.



அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடையே ஆ.ராசா கூறும் போது, மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு இடங்களில் தடுப்பு சுவர் இடிந்துள்ளதாகவும், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

பயிர் சேதம் பெரிய அளவில் இல்லை என்றும், இருப்பினும் கள ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...