வேளாண் சட்டங்கள் வாபஸ்; போராட்டத்தில் உயிரிழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன்

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கோவை: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கொண்டாட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேட்டியில் கூறியதாவது;

இந்திய நாட்டில் விவசாயிகளினால் நிராகரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு, திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு 600 விவசாயிகளின் வீர மரணத்திற்குப் பிறகு, ஓராண்டு காலம் பல போராட்டங்களை முன் எடுத்து நடத்திய பிறகு, பல துன்பங்களை அனுபவித்து, விவசாயிகள் மீது வேனை ஏற்ற கொலை செய்த பின்பும் அமைதி காத்து மிக வழுவாக நின்ற இந்திய நாட்டின் விவசாய பெருங்குடி மக்களுக்கு தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம்.

யாராலும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைவணங்குகிறோம்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்திலே தீர்மானங்களை நிறைவேற்றிய அனைத்து மாநில அரசுக்கும் தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடிய விவசாயிகளுக்கும், உயிர் நீட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம்.

மேலும், உயிர் இழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் பொதுத் துறை சொத்துகள் விரைவில் மீட்டு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...