உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌: கோவையில் நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம்.!!

உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌ 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்‌ நுரையீரல்‌ சிறப்பு மருத்துவ பிரிவில்‌ நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது‌. இந்த முகாம்‌ ஐந்து நாட்கள்‌ நடைபெறும்‌.


கோவை: உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌ 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது‌.

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்‌ நுரையீரல்‌ சிறப்பு மருத்துவ பிரிவில்‌ நடைபெறுகிறது.



இதனைக் கல்லூரி முதல்வர்‌ Dr.A.நிர்மலா‌ துவக்கி வைத்தார்‌.



நுரையீரல்‌ துறைத்தலைவர்‌ Dr.S.கீர்த்திவாசன், மருத்துவர்கள்‌ Dr.R.வாணி, Dr.V.அருண்சந்தர், மற்றும்‌ மேற்படிப்பு மாணவர்கள்‌ இந்த முகாமில்‌ பங்கேற்று பொது மக்களுக்கு நோய் காரணிகள்‌ தடுப்பு முறைகள்‌, நோயின்‌ அறிகுறிகள்‌ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌.

தற்பொழுது இந்தியாவில்‌ ஏறக்குறைய 55 மில்லியன்‌ மக்கள்‌ இந்த நோயினால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ இறப்பு விகிதத்தில்‌ முதற்காரணமாக உள்ளது.

முதல்வர்‌ Dr.A.நிர்மலா, கூறுகையில்‌, "புத்தகத்தைப்பிடித்தல்‌, காற்று மாசு ஆகியவை இந்நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்‌.

மேலும்‌ நோயின்‌ அறிகுறிகளான நாள்‌ பட்ட இருமல்‌ மற்றும்‌ மூச்சுத் திணறல்‌ இருப்பின்‌ மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்‌" என்று கூறினார்‌. இந்த முகாம்‌ ஐந்து நாட்கள்‌ நடைபெறும்‌.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...