கோவையில் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த திருடனை கையும் களவுமாகப் பிடித்த போலீசார்.!!

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தொழிலாளியிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.


கோவை: கோவையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தொழிலாளியிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கோவையை அடுத்துள்ள வீரபாண்டி ஐயா சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமன் வயது 35, கூலித்தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக காந்திபுரம் சென்றார். அங்கிருந்து பேருந்தில் வீடு திரும்பினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தில் நின்றுகொண்டு வந்தார்.

அவர் மீது ஒருவர் மோதிக் கொண்டே வந்தார். இந்த நிலையில் சின்ன தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பஸ் நின்றதும் ராமன் இறங்கினார். அப்போது அவரை இடித்துக் கொண்டு வந்தவர். திடீரென அவரை தள்ளி விட்டு இறங்கினார்.

இதனால் சந்தேகமடைந்த ராமன் தனது மேல் பாக்கெட்டை பார்த்தார். தான் வைத்திருந்த பணத்தை காணவில்லை. உடனே அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டார். திருடன் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினான். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார். ஓடி அவனை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சின்ன தடாகம் குட்டை வழியைத் தேர்ந்த பாப்பன் என்கிற ராஜேந்திரன் 37, என்பதும் இவர் மீது ஏற்கனவே கோவில்பாளையம் மற்றும் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...