தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செந்தில் பாலாஜி

பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் பெரிய நெகமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தனர்.


கோவை: பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் பெரிய நெகமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை மூலம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நகராட்சி மற்றும் பேரூராட்சி வாரியாக மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று வருகிறார்.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மக்கள் சபை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, கடந்த 30-ஆம் தேதி முதல் 150- இடங்களில் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.



முதற்கட்டமாக 25,000 மனுக்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பத்து முறை, பதினைந்து முறை பொதுமக்கள் கொடுத்த எந்த மனுவிற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் நம்பிக்கையோடு மனுக்கள் வழங்கியுள்ளனர்.

இதன் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். பெரும்பாலானவர்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கேட்டு வழங்கியுள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் துறை வாரியாக ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...