திருப்பூரில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.!!

கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி. அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தரவில்லை என குற்றம்சாட்டி தற்பொழுது 100-மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாநகரில் நேற்று 5 மணி நேரமாகக் கனமழை பெய்தது. இதனால் அவிநாசி பாளையம், மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, கல்லூரி சாலை, ஊத்துக்குளி சாலை என பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. அங்கேரிபாளையம், போயம்பாளையம், ராயபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதி பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் பொம்ம நாயக்கன் பாளையம் வாவிபாளையம் பிரதான சாலையில் இருக்கக்கூடிய பாலன் நகர், பி ஆர் ஜி கார்டன், வைஷ்ணவி கார்டன் உள்ளிட்ட சுமார் 8-க்கும் மேற்பட்ட தெருக்களில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக முழங்கால் அளவிற்குத் தண்ணீர் சூழ்ந்தது.

இன்று காலை அதுவாகவே வடிந்த நிலையில் தார்ச்சாலை இல்லாத காரணத்தினால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் சாலைகள் முழுவதும் சகதிகளாக இருப்பதால் வெளியில் வருவதற்கு அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தற்பொழுது வரை இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தரவில்லை எனக் குற்றம்சாட்டி தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...