உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது-ஜி.ராமகிருஷ்ணன்

உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 85-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்தியச் சிறையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

சிறை வளாகத்தில் உள்ள செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அன்னியராட்சிக்கு எதிராக வ.உ.சி துவங்கிய போராட்டம் சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகர் சூர்யா மீதும் அதன் இயக்குனர் மீதும் கடும் விமர்சன தாக்குதல் நடத்தப்படுகின்றது.

திரைத்துறையை இயல்பாக இயங்க அனுமதிக்க வேண்டும் என பாரதிராஜா உட்பட திரைத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை சி.பி.எம் கட்சி வரவேற்கின்றது.

உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை, விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்து வருகின்றது. துறைமுகம், விமான நிலையம், பொதுத்துறை நிறுவனம், போன்றவற்றை அடகு வைக்கும் கொள்கையை மத்திய அரசு கையாள்கின்றது.

வ.உ.சியின் லட்சியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கின்றது. மாநில முதல்வர் வ.உ.சி. சிலையைக் கோவையில் திறக்க இருக்கின்றார். மத்தியச் சிறையில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிக்கவும், செக்கிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெறவும் கடினமாக இருக்கின்றது.

கோவையில் வ.உ.சிக்கு சிலை வைக்கும் இடத்தில் மத்தியச் சிறையிலிருந்து செக்கினை எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குப் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி 33- ரூபாயும், டீசலுக்கு 32- ரூபாயும் வசூலிக்கின்றது. வருடத்திற்கு 2-லட்சத்து 87000-ஆயிரம் கோடி வரியைக் கலால் வரி மற்றும் கூடுதல் வரி மூலம் வசூலிக்கப்படுகின்றது. பா.ஜ.கவின் போராட்ட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...