கோவையில் கனமழையால் 50-ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது.!!

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ததில் கோவை மாநகராட்சிக்கு பின்புறம் உக்கடம் பகுதியில் உள்ள 50-ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.


கோவை: கோவையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்த நிலையில் 50 வருடப் பழமையான மரம் சாய்ந்தது.

வானிலை ஆய்வு மையம் புதியதாக ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்திருந்தது.

நேற்று இரவு திடீரென கோவையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இடி மின்னலுடன் 3 மணி நேரம் மழை கொட்டியது.

ஆதலால் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மிதந்து சென்றன. நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மிதந்தன. 50 வருடப் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. கோவை மாநகரம் இருளில் மூழ்கியது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 3 மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

உப்பிலிபாளையம், வடகோவை, லங்கா கார்னர் பகுதிகளில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கியது. உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், பீளமேடு, உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சிதம்பரம் நகர் பகுதியில், மழைநீர் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள் நுழைந்து தேங்கி நின்றது. உக்கடம் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சரிந்ததில், நான்கு, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதைப்போலக் கோவை மாநகராட்சிக்குப் பின்புறம் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.



கோவை சாய்பாபா காலனி சிவானந்தா காலனி ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் இருளில் மூழ்கின தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பாக மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...