பல்லடத்தில் வீடுகளில் சூழ்ந்த மழைநீர்: 5-குழந்தைகள் உட்பட 11-பேர் படகு மூலம் மீட்பு..!

பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளிலிருந்த 5-குழந்தைகள் உட்பட 11-பேரை ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளிலிருந்த 5-குழந்தைகள் உட்பட 11-பேரைப் படகுகள் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்தது.

அதன் படி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இந்நிலையில் அவினாசி பாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளிலிருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் காலையில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். வீட்டிலிருந்தவர்கள் அவினாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத் துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி(12), ஸ்ரீ ஹரி(9) மற்றும் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம் பிரவீன்(8), பிரனிதா(6), தர்ஷீத்(2) ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...