போலி நிறுவன பிரதிநிதிகளை நம்ப வேண்டாம்... விவசாயிகளுக்கு வேளாண் துறை எச்சரிக்கை.!!

போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரியப் பலன்கள் கிடைப்பதில்லை.

எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...