குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டது தொடர்பாக கோவை என்ஜினீயர் வீட்டில் சி பி ஐ அதிகாரிகள் சோதனை

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில், கோவை பெ.நா. பாளயத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை, லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டது தொடர்பாக என்ஜினீயர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதுடன், லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.

குழந்தைகளின் ஆபாச படங்களை புழக்கத்தில் விடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்பவர்கள், தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, தமிழகம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய என்ஜினீயர் வீட்டிற்கு சி.பி.ஐ.அதிகாரி மாணிக்கவேல் தலைமையில் 4 பேர், நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை சோதனை செய்தனர்.

சோதனை முடிவில், அவர் வீட்டில் இருந்து லேப்டாப் , செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டதில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் , செல்போனை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே, மேல் நடவடிக்கை எடுப்பார்கள், என்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...