திருப்பூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி.!!

திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

திருப்பூர் மாநகரில் நேற்று மாலை முதல் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால்மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, கல்லூரி சாலை, ஊத்துக்குளி சாலை என பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.



இதனால் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

மழை நீரில் நனைந்த வாகனங்கள் சில ஸ்டார்ட் ஆகாததால் அவற்றைத் தள்ளியபடி மழையில் நனைந்து கொண்டே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

தொடர் மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. அங்கேரிபாளையம், போயம்பாளையம், ராயபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...