கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1-லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது- அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை‌ மாவட்டத்தில்‌ இதுவரை 150-இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியின்‌ மூலம்‌ 1 லட்சத்து 41 ஆயிரத்து 351 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை‌ மாவட்டத்தில்‌ இதுவரை 150-இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியின்‌ மூலம்‌ 1 லட்சத்து 41 ஆயிரத்து 351 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 14, 13, 12, 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வார்டு பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்‌ கொண்டார்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்கள்‌ தங்களது வார்டு பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ இதர வசதிகள்‌ தொடர்பான குறைகள்‌ குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும்‌ வகையில்‌ கோவை வடக்கு சட்டமன்ற தொகுகிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சி இன்று 17.11.2021 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ முன்னிலை வகித்தார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ வரவேற்புரையாற்றினார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.14 கலையரங்கம்‌, கோவில்மேடு, வார்டு எண்‌.13 சிந்தி வித்யாலயா மெட்ரிகுலேசன்‌ பள்ளி, தடாகம்‌ ரோடு, வார்டு எண்‌.12 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே புதூர் வார்டு எண்‌.15 மணிப்பிரியா திருமண மண்டபம்‌, பி.என்‌.புதூர், வார்டு எண்‌.16 மருதமலை சுப்ரமணியசுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.17 சங்கரநாராயண

திருமண மண்டபம்‌, மருதமலை பிரதான சாலை வடவள்ளி, வார்டு எண்‌.18 சமுதாயக்கூடம்‌, ஓம்கணேஷ்‌ நகர்‌, வடவள்ளி, வார்டு எண்‌.19 அரசு நடுநிலைப்பள்ளி வீரகேரளம்‌, வார்டு எண்‌.20 ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரியம்மன்‌ திருமண மண்டபம்‌ சீரநாயக்கன்பாளையம்‌, வார்டு எண்‌.21 சமுதாயக்கூடம்‌ நாயக்கர் தோட்டம்‌, பூசாரிபாளையம்‌ ஆகிய பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-







தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌, நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும்‌, மொத்தம்‌ 150 இடங்களில்‌ மாவட்டத்தின்‌ அனைத்து துறை அதிகாரிகள்‌ நேரில்‌ சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறும்‌ மாபெரும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சியானது கடந்த 30 தேதி முதல்‌ துவங்கப்பட்டு, இதுவரை கோவை மாவட்டத்தில்‌ 150 இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து 1,41,351 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது.

அவற்றில்‌ பாதிக்கும்‌ மேற்பட்ட மனுக்களின்‌ மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மிக விரைவில்‌ மீதமுள்ள மனுக்கள்‌ மீதும்‌ துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்‌. முதலமைச்சர்‌‌ மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள்‌, தாய்மார்கள்‌, இளைஞர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நான்‌ ஒரு உறுதியளிக்கிறேன்‌ இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின்‌ அனைத்து துறையைச்‌ சார்ந்த அதிகாரிகளும்‌ உங்களது கோரிக்கை மனுக்கள்‌ மீது உரிய வகையில்‌ மிக விரைவாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுத்து அரசின்‌ உத்தரவுகளை பெற்றுத்தருவார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ இதுவரை நடைபெறாத ஒரு சரித்திர சாதனையாக முதலமைச்சர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளில்‌ ஒரு வார்டுக்கு ஒரு இடமென தோர்வு செய்யப்பட்டு பொதுமக்களை நேரில்‌ சென்று சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு உரிய தாவுகளைக்‌ காணவேண்டுமென உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்‌. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ தற்போது 9 நாட்கள்‌, 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களின்‌ கோரிக்கையினை கருத்தில்‌ கொண்டு, மாநகராட்சி பகுதிகள்‌ முழுவதும்‌ கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநா விநியோகம்‌ செய்யும்‌ அளவிற்கு முதலமைச்சர்‌ உத்தரவின்படி சிறப்புத்‌ திட்டம்‌ அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள்‌ பெற்று மேம்படுத்தக்‌ கூடிய பணிகள்‌ முன்னெடுக்கப்பட உள்ளது.

பல்வேறு பகுதிகளில்‌ பாதாள சாக்கடை, மழைநீர்‌ வடிகால்‌ திட்டங்கள்‌ முழுமையாக நிறைவேற்றப்படாமல்‌ உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடா்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில்‌ அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தக்‌ கூடிய திட்டங்கள்‌ ஆண்டு வாரியாக பிரித்தெடுத்து கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும்‌ முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டப்‌ பணிகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள்‌ விரைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும்‌ கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார்‌ செய்யப்பட்டு, அதற்கான சிறப்பு நிதிகளை பெற்று பழுதடைந்த சாலைகள்‌ விரைவில்‌ புதுப்பிக்கப்பட்டு தாவு காணப்படும்‌. கோவை மாவட்டத்தில்‌ விடுபட்ட அனைவருக்கும்‌ முதியோர்‌ உதவித்‌ தொகை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகள்‌ தொடர்பான கோரிக்கைகள்‌ பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. அவற்றை துறை ரீதியாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தாவு காணப்படும்‌.

மேலும்‌, தோதல்‌ நேரத்தில்‌ முதலமைச்சர்‌ 505 வாக்குறுதிகளைத்‌ தந்தார்கள்‌. அதில்‌ ஆட்சிப்பொறுப்பேற்ற 5 மாத காலத்தில்‌ 202 வாக்குறுதிகளை முதலமைச்சா்‌ நிறைவேற்றித்‌ தந்திருக்கின்றார்‌.

குறிப்பாக தாய்மார்களுக்கு 2.9 கோடி குடும்ப அட்டைதாராகளுக்கு தலா ரூ.4 ஆயிரம்‌ நிவாரண உதவித்தொகை மற்றும்‌ கோவிட்‌ காலத்தில்‌ 14 வகையான பொருட்கள்‌ இலவசமாக வழங்கியிருக்கின்றார்‌. பெட்ரோல்‌ விலை மற்றும்‌ ஆவின்‌ பால்‌ விற்பனை விலைகளை குறைத்துள்ளார்கள்‌. மேலும்‌, அரசு பேருந்துகளில்‌ மகளிருக்கு இலவச பயணம்‌ உள்ளிட்ட பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களை அறிவித்திருக்கின்றார்‌.

கோவை மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்கு, மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள்‌ உட்பட 234 தொகுதிகளிலும்‌ பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சா்‌ வழங்க இருக்கின்றார்‌. கோவை மாநகராட்சியின்‌ வளர்ச்சி திட்டப்பணிகளில்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார்‌ ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெகுவிரைவில்‌ முதலமைச்சர்‌ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. கோவை சத்தி சாலை மேம்படுத்தப்படும்‌ என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, முன்னாள்‌ அமைச்சா்‌ பொங்களுர்‌ பழனிசாமி, முன்னாள்‌ பேரூராட்சித்‌ தலைவர்‌ பையா கிருஷ்ணன்‌, முன்னாள்‌ சிங்காநல்லூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ நா.கார்த்திக்‌, மருதமலை சேனாதிபதி, முன்னாள்‌ மேயர்கள்‌ கணபதி ப.ராஜ்குமார்‌, காலனி வெங்கடாச்சலம்‌, மேற்கு மண்டல உதவி ஆணையார்‌ டி.சிவசுப்பிரமணியம்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...