நிரந்தரமாக ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கு மருத்துவ பயன்கள் வழங்குதல் மற்றும் தொழிலதிபர்கள் இ.எஸ்.ஐ.சி ஆன்லைன் போர்டலில் யு.ஏ.என் பதிவு செய்தல் தொடர்பாக அரசாணைகள் வெளியாகி உள்ளது.
கோவை:நிரந்தரமாக ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கு மருத்துவ பயன்கள் வழங்குதல் மற்றும் தொழிலதிபர்கள் இ.எஸ்.ஐ.சி ஆன்லைன் போர்டலில் யு.ஏ.என் பதிவுசெய்தல் தொடர்பாக அரசாணைகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதிலும் இ.எஸ்.ஐ. சட்டம் நடைமுறைப்படுத்துதல், இ.எஸ்.ஐ விதிகள் 1950 விதி 60/61 ன் கீழ் நிரந்தரமாக ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கு மருத்துவ பயன்கள் வழங்குதல் மற்றும் தொழிலதிபர்கள் இ.எஸ்.ஐ.சி ஆன்லைன் போர்டலில் யு.ஏ.என் பதிவுசெய்தல் தொடர்பாக அரசாணைகள் வெளியாகி உள்ளது.
1)கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதிலும் இஎஸ்ஐ சட்டத்தை அமல்படுத்துதல்:-
இந்திய அரசு 29/10/2021 அன்று வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இ.எஸ்.ஐ திட்டம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 2021 நவம்பர் 01 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், கோயம்புத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தொழிற்சாலைநிறுவனங்கள், பின்வரும் வலையதளம் (www.esic.nic.in) மூலம் உடனடியாக இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவுசெய்து சட்டரீதியான நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
॥) இ.எஸ்.ஐ விதிகள் 1950 விதி 60/61ன் கீழ் நிரந்தர ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கான மருத்துவ பயன்கள்:-
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன், இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ், தகுதியான ஓய்வு பெற்ற / நிரந்தர ஊனமுற்ற காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு ஆண்டுக்கு ரூ.120/- செலுத்தும் பட்சத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகிறது.இத்திட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு.
அ) நிரந்தர ஊனமுற்ற காப்பீட்டு நபர்களுக்கு மருத்துவ பயன்கள் (விதி 60)-
தொழிற்சார் காயங்களால் ஏற்பட்ட நிரந்தர ஊனம் காரணமாக மாதாந்திர உதவி தொகை பெறும் தகுதியான ஒரு காப்பீட்டு நபர், தனக்கும் அவரது துணைவருக்கும் (மனைவி/கணவர்) ஒரு வருடத்திற்கு நூற்று இருபது ரூபாய் செலுத்துவதன் மூலம், இ.எஸ்.ஐ மருத்துவமனைமருந்தகங்களில் மருத்துவ சிகிச்சையை, அவர் அத்தகைய நிரந்தர ஊனம் அடையாமல் இருந்து ஓய்வு பெற தகுதியான தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் சார்தோர் உதவி பயன் கொரோனா நிவாரண பயன் பெறும், இறந்த காப்பீட்டு நபரின் துணைவர் (மனைவி/கணவர்) விதி 60 ன் கீழ் தொடர்ந்து இந்த மருத்துவ பயன்களை மேற்கூறிய பங்களிப்புத் தொகையை செலுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்..
ஆ) ஓய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கு மருத்துவ பயன்கள் (விதி 61):
5 வருடங்களுக்கு குறையாமல் இ.எஸ்.ஐ பங்களிப்பு செய்த ஒய்வு பெற்ற அல்லது விருப்ப ஒய்வு பெற்றவர்களும் அவர்களின் துணைவர்களும் (மனைவி /கணவர்) வருடம் ஒன்றிற்கு ரூபாய் 120 செலுத்தி இ.எஸ்.ஐ மருத்துவமனை மருந்தகங்களில் மருத்துவ பயன்களை பெற்றுக்கொள்ளலாம். விதி 61ன் கீழ் மருத்துவ பயன் பெற்று வரும் காப்பீட்டு நபர் இறந்தால் அவரின் துணைவர் (மனைவி/கணவர்) விதி61: கீழ் தொடர்ந்து இந்த மருத்துவப் பயன்களை மேற்கூறிய பங்களிப்புத் தொகையை செலுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
॥) இ.எஸ்.ஐ.சி ஆன்லைன் போர்டலில் யுஏஎன் பதிவுசெய்தல்:-
தொழிலதிபர்கள் தமது அனைத்து தொழிலாளர்களின் யுஏஎன் (இ.பி.எஃப்.ஓ வால் வழங்கப்பட்ட) எண் ஐ இஎஸ்ஐசி ஆன்லைன் போர்டலில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த இரண்டு திட்டங்களையும் உங்கள் மதிப்பிற்குரிய தினசரியில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இது இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் காப்பீட்டாளர் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு மிகக் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது.
மேலும் விபரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள இஎஸ்ஐசி கிளை அலுவலகம் அல்லது 0422 - 2314430 என்ற எண்ணில் சார் மண்டல அலுவலகம் கோவை உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.