கோவையில் வழிப்பறி திருடர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்.!!

அன்னூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை நண்பர்களுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் பாராட்டினர்.


கோவை: அன்னூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை நண்பர்களுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் பாராட்டினர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் வயது 31, இவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அன்னூர் அடுத்த கஞ்சம் பள்ளி அருகே நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து மிரட்டி பணம் தருமாறு கத்தியைக் காட்டி கூறினர். அப்போது ரஜி தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே அவர் தள்ளிவிட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த ரஜி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக தனது நண்பர்களுக்கு போன் போட்டு வரவழைத்து போட்டார் சைக்கிளில் திருடர்களைத் தேடிச் சென்றனர். அப்போது திருடர்கள் ருத்தமபாளையம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த ரஜி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் வழிப்பறிக் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களை அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நீஷ்தார் 21, மற்றும் காரமடையைச் சேர்ந்த தினேஷ் 22 என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தினேஷ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. அவர்களைப் பிடித்துக் கொடுத்த ரஜி மற்றும் நண்பர்களை போலீசார் பாராட்டினார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...