கோவை கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும், தாய்மார்கள் வேண்டுகோள்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெரும் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட வயதானவர்களும் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அரசிடம் கொடுப்பர்.

தங்கள் மனு மீதான அரசின் நிலைப்பாடுகளை பொறுத்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுவர். இது போன்ற நேரங்களில், தங்கள் மனு உரிய அதிகாரிகளிடம் சென்று, அவர்களிடம் இருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வரும் வரையில் கால்கடுக்க காத்திருப்பர். இதில் கர்பிணிகளும், கைக்குழந்தைகளோடு வரும் பெண்களும் அடங்குவர்.



இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கதறி அழுத தன் கைக்குழந்தைக்கு பாலூட்ட இடம் கிடைக்காமல் அலைந்தார். பின்னர், அவ்வளாகத்தின் வெளியில் இருந்த ஏடிஎம் மையம் அருகில் சென்று அந்த பிள்ளைக்கு பாலூட்டினார். இந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை சற்றே உறுத்தியது.

மனு அளிக்க மட்டுமன்றி பல்வேறு அரசு அலுவல்கள் காரணமாக ஏராளமான தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...