திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து இலை தழைகளை ஆடையாக அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்.!!

நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலை தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலை தழைகளை ஆடையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வரக் கூடிய சூழ்நிலையில், பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 50-ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இது குறித்து, ஏற்கனவே தொழில் துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியும், எந்த வித நடவடிக்கையும், எடுக்காத சூழலில் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி பருத்தி பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவாக முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நின்று போகும் சூழலில் மீண்டும் கற்கால மனிதன் போல இலை தழைகளை ஆடையாக அணியும் சூழல் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் இலை தழைகளை ஆடையாக அணிந்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...